தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தேர்தலில் அதிமுகவும் - விஜய்யின் தவெக-வும் ஒரணியில் போட்டியிட்டு வெற்றிப் பெற்றுள்ளன.

Advertisment

அதாவது,  தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் துணைத் தலைவராக அதிமுக  ராஜ்சத்யனும், பொதுச்செயலாளராக த.வெ.க.வின் ஆதவ் அர்ஜுனாவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத்தின் தேர்தல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் வெற்றிபெறுவதையும் போட்டியிடுவதையும் அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் பெருமையாக கருதுகின்றனர்.  தேர்தலின் போது அங்கீகரிக்கப்பட்ட 28 ஒலிம்பிக் விளையாட்டு சங்கங்களால் நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

அந்த வகையில்,நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு  இந்த சங்கத்தின் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. அதில் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் வேந்தரும், திரைப்பட தயாரிப்பாளருமான ஐசரி கே.கணேஷ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Advertisment

அதேபோல், துணைத் தலைவர் பொறுப்புக்கு  அதிமுக தகவல் தொழிநுட்ப பிரிவு மாநில செயலாளர் ராஜ்சத்யனும், த.வெ.க. தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாரான ஆதவ் அர்ஜுனாவும் ஒரே அணியில் போட்டியிட்டனர். தேர்தல் முடிவுகளில்  இருவரும் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

அரசியல் களத்தில் அதிமுக - தவெக கூட்டணி உதயமாகுமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தேர்தலில் அதிமுக, த வெ க கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் ஒரே அணியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தொடர்ந்து இருவரும் ஒன்றாக இணைந்து செயல்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.