Advertisment

“தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை எப்போது?” - வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

anna-arivalayam

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அதேபோல் அ.தி.மு.க. - பா.ஜ.க அடங்கிய கூட்டணி தேர்தலில் களம் காண்கின்றன. சீமானின் நாம் தமிழர் கட்சி, கடந்த தேர்தல்களைப் போலவே 234 தொகுதிகளிலும் கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிடுகிறது. அதேபோல் விஜய்யின் த.வெ.க.வும் தனித்துப் போட்டியிட உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, தே.மு.தி.க. எந்த கூட்டணியில் இடம் பெரும் என்பதை அறிவிக்காமல் பொறுமை காத்து வருகிறது.

Advertisment

இத்தகைய சூழலில் தான் திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி., ராமநாதபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது செய்தியாளர் ஒருவர், “இதுவரைக்கும் கூட்டணி பேச்சுவார்த்தைக்கான குழு அமைக்கப்படவில்லை என்று கூறுகின்றனர்?” எனக் கேள்வி எழுப்பினர். அதற்குக் கனிமொழி, “விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட இருக்கிறது. அதனால் தேர்தல் குழு நிச்சயமாக அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் திமுக தொகுதி பங்கீட்டுக் குழு, கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பேச்சுவார்த்தை எப்போது தொடங்கும் என அக்கட்சியின் தலைமைக்கழக அறிவித்துள்ளது. 

Advertisment

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “நடைபெறவுள்ள 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கான களப்பணிகளில் திமுக தொண்டர்கள் சுற்றிச் சுழன்று பணியாற்றி வருகின்றனர். வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்புத் திருத்த நடவடிக்கை நிறைவடைந்திருக்கிறது. இதற்காக, மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள், தொகுதிப் பார்வையாளர்கள், பகுதி-நகர-ஒன்றியக் கழகச் செயலாளர்கள்-நிர்வாகிகள், சார்பு அணியினர், வாக்குச்சாவடி முகவர்கள் குழுவினர் என இலட்சக்கணக்கானோர். கடந்த சில வாரங்களாகத் தீவிர பணியாற்றி வந்துள்ளனர்.

arivalayam-mks

'ஓரணியில் தமிழ்நாடு' உறுப்பினர் சேர்க்கை, 'என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி', மேற்கு மற்றும் வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு டெல்டா மற்றும் தெற்கு மண்டல மகளிரணி மாநாடு என வெற்றிக்கனி பறிப்பதற்கான அடிப்படைப் பணிகளை அர்ப்பணிப்போடு செயல்பட்டு வருகிறார்கள். இனி வரும் நாட்களில் வீடு வீடாக, வெல்லும் தமிழ்பெண்கள் பரப்புரையை, மகளிர் படை மேற்கொள்ளவிருக்கிறது. மேலும், வாக்குச்சாவடி குழுவினருக்கு நான்கு பயிற்சி மாநாடுகள், திருச்சியில் 'ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்' மாநாடு என இடைவிடாத களப் பணிகள் ஒரு புறமும், திராவிட மாடல் அரசின் மூலம் அடுக்கடுக்கான நலத்திட்டங்களின் அமலாக்கம் மறுபுறமும் ஒவ்வொரு நாளும் நடந்து வருகின்றன.

தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கான குழு அமைக்கப்பட்டு, அக்குழுவினர் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் அறிந்து வருகின்றனர். இதுவரையிலும் 75 ஆயிரம் கோரிக்கைகளும் பரிந்துரைகளும் பெறப்பட்டுள்ளன. வரும் 17ஆம் தேதி தமிழ்நாடு அரசின் இடைக்கால நிதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு, தொடர்ந்து அதன் மீதான விவாதம் நடைபெற இருக்கிறது. தமிழக முதல்வரும், திமுக  தலைவருமான மு.க. ஸ்டாலின் மூலம் விரைவில் அமைக்கப்படவுள்ள திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவானது சட்டப்பேரவை அலுவல்கள் நிறைவடைந்தவுடன், பிப்ரவரி 22ஆம் தேதி முதல் கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என தெரிவிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Announcement Alliance dmk mk stalin Assembly Election 2026
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe