Advertisment

கமேனி மறைவு -இரங்கல் புத்தகத்தில் கையெழுத்திட்ட 'இந்தியா'

35

Official action - Vikram Misri signs the condolence book Photograph: (india)

அமெரிக்காவும் இஸ்ரேலும் "ஆபரேஷன் எபிக் ஃப்யூரி" என்ற பெயரில் ஈரானிய ராணுவம், அணுசக்தி மற்றும் தலைமைத்துவ தளங்களை குறிவைத்து மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலில் ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் நடந்த உயர்மட்டத் தாக்குதலில் ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் பல உயர் இராணுவ மற்றும் அரசியல் பிரமுகர்களின் இறந்துள்ளது பரபரப்பான சூழலை மத்திய கிழக்கில் ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

அமெரிக்க நட்பு நாடுகளான துபாய் பஹ்ரைன், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம், குவைத், ஓமன் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரால், சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி அன்று தொடங்கிய இந்த தாக்குதல் சம்பவம் இன்று வரை நீடித்து வருகிறது. இதன் நீட்சியாக, ஈரான் நீரிணையை மூடியதைத் தொடர்ந்து கப்பல் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதன் விளைவாக, நூற்றுக்கணக்கான கப்பல்கள் தங்களின் பயணத்தைத் தொடர முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், அமெரிக்கக் கப்பல்கள் சில தாக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

Advertisment

இன்று (04-03-26) இலங்கை தெற்கு கடற்கரையில் ஈரானிய கப்பல் ஒன்று தாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல், உலக அரங்கில் மேலும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில், ஈரானிய கப்பல் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இலங்கை தெற்கு கடற்கரையில், ஈரான் கப்பலில் இருந்து அபாய சமிஞ்கை கிடைத்ததையடுத்து, அந்த பகுதிக்கு இலங்கை கடற்படை மீட்புக் குழுவை அனுப்பியுள்ளது. இந்த தாக்குதலில், கப்பலில் இருந்த 101 பேர் காணாமல் போனதாகவும், 78 பேர் காயமடைந்துள்ளதாகவும் இலங்கை கடற்படை மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அந்த கப்பலில் இருந்தவர்களின் துல்லியமான எண்ணிக்கை மற்றும் கப்பல் மீது தாக்குதல் நடத்தியவர்கள் குறித்தான விவரங்கள் கிடைக்கப்பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தாக்குதலுக்குள்ளாகி மூழ்கிக்கொண்டிருந்த கப்பலில் இருந்து கிட்டத்தட்ட 30 பேர் மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த பரபரப்புகளுக்கு மத்தியில் அமெரிக்காவால் கொல்லப்பட்ட ஈரானின் உச்ச தலைவர் கமேனிகின் மறைவுக்கு இந்தியா இரங்கல் தெரிவித்திருக்கிறது. ஈரான் தூதிரக்கத்தில் உள்ள இரங்கல் குறிப்பு புத்தகத்தில், இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி கையெழுத்திட்டார். இந்திய அரசின் சார்பாக சென்ற அவர், ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனிக்கு தனது அஞ்சலியைச் செலுத்தியுள்ளார். இந்த நிகழ்வின் போது, இந்தியாவுக்கான ஈரான் தூதர் முகமது ஃபதாலி-ஐ சந்தித்து இந்தியாவின் ஆழ்ந்த இரங்கலை விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார். காமேனியின் மறைவுக்குப் பிறகு இந்தியா மேற்கொண்ட முதல் அதிகாரப்பூர்வ தூதரக நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது. முன்னதாக, மார்ச் 2-ம் தேதியன்று இந்தியாவில் ஒரு நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

America India iran israel
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe