அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவை பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (எஃப்.பி.ஐ) அதிகாரிகள் வெள்ளை மாளிகை ஓவல் அலுவலகத்திற்குள் கைது செய்துவது போல் உருவாக்கப்பட்ட ஏ.ஐ வீடியோவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
‘சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் யாரும் இல்லை’ என்ற தலைப்பில் டீப்ஃபேக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட அந்த வீடியோவில், ‘யாரும் குறிப்பாக அதிபர் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல’ என அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, ஜோ பைடன் உள்பட பல்வேற் ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் என ஒவ்வொன்றாகக் கூறுகின்றனர். அதன் பின்னர், வெள்ளை மாளைகையின் ஓவல் அலுவலகத்திற்குள், எ.ஃப்.பி.ஐயால் (FBI) ஒபாமா கைவிலங்கு செய்யப்பட்டு கைது செய்யப்படுகிறார். சில நொடிகளுக்குப் பிறகு சிறைச்சாலையில் ஆரஞ்ச் நிற ஜம்ப்சூட் அணிந்து கம்பிகளுக்குப் பின்னால் ஒபாமா காணப்படுகிறார். அதிபர் ஒருவர், ஒது போன்ற வீடியோவை அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில், ஒபாமா மோசடி செய்ததாக தேசிய புலனாய்வு இயக்குநர் (DNI) குற்றம் சாட்டிய சில நாடுகளுக்குப் பிறகு, இது போன்ற சர்ச்சையான வீடியோவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளார்