பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த முன்னாள் முதல்வரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், அக்கூட்டணியில் இருந்து வெளியேறி அதிமுக ஒருங்கிணைக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் எழுப்பி வந்தார். அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் தொடர்ந்து காலக்கெடு விதித்து வந்தார். 

Advertisment

அதற்கு எடப்பாடி பழனிசாமி பிடி கொடுக்காததால், தனது அடுத்த கட்ட அரசியல் நகர்வு குறித்து விரைவில் அறிவிப்பேன் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்து வருகிறார். இந்த சூழ்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் அடுத்தடுத்து விலகி திமுக, அதிமுகவில் இணைந்து வருகின்றனர். ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர்களான மனோஜ் பாண்டியன், வைத்தியலிங்கம் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து திமுகவில் இணைந்தனர். அதனைத் தொடர்ந்து மாநிலங்களவை எம்.பி.யும் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளருமான ஆர். தர்மர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து இன்று (24.01.2026) அதிமுகவில் இணையவுள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. 

Advertisment

இந்நிலையில் ஓ. பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளரான மாநிலங்களவை எம்.பி. தர்மர் அதிமுகவில் இணைந்துள்ளார். அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைத்துக் கொண்டார். மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தை சார்ந்த ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் பலரும், எம்.பி. தர்மருடன் சேர்ந்து மீண்டும் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். அப்போது அதிமுகவின் மூத்த நிர்வாகிகளான எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஷ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிடோர் உடன் இருந்தனர். 

dharmar-mp-joins-1

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளராக இருந்தவர் தர்மர். இவருக்கு கடந்த 2022ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அதிமுகவில் எற்பட்ட பல்வேறு விதமான உட்கட்சி பிரச்சனைகள் எழுந்த போது, ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக செயல்ப்பட்ட தர்மர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். 

Advertisment

அதோடு ஓ. பன்னீர் செல்வம் கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக ஓ. பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளராக இருந்த தர்மர், ஓ. பன்னீர்செல்வத்திடம் இருந்து விலகி மீண்டும் தன்னை அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளாக இருந்தத தர்மர் அதிமுகவில் மீண்டும் இணைத்து கொண்ட சம்பவம் அதிமுக அரசியல் வட்டாரத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது