Advertisment

“தமிழக அரசியலைப் பற்றி பேசினேன்” - அமித்ஷாவை சந்தித்த பின் ஓ.பி.எஸ் பரபரப்பு பேட்டி

ops

O Panneerselvam sensational interview after meeting Amit Shah

டிசம்பர் 15ஆம் தேதிக்குள் அதிமுக இணைவது பற்றி முடிவு செய்ய வேண்டும், இல்லையென்றால் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று முன்னாள் முதல்வரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் அண்மையில் கெடு விதித்திருந்தார். டிசம்பர் 15ஆம் தேதிக்குள் அதிமுக இணைவது பற்றி முடிவு அறிவிக்கப்படாமல் இருந்தால் ஓ.பன்னீர்செல்வம் புதிய கட்சி தொடங்க இருப்பதாகத் தகவல் வெளியானது.

Advertisment

இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்லில் ஓ.பன்னீர்செல்வம் நேற்று (02.12.2025) மாலை டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர், பா.ஜ.க மூத்த தலைவர்களைத் சந்திக்க திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இதனிடையே, ஆடிட்டர் குருமூர்த்தியும் டெல்லி சென்றுள்ளதாகக் கூறப்பட்டது. அதன்படி டெல்லியில் முகாமிட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம், பா.ஜ.கவின் முக்கிய தலைவர்களைச் சந்தித்துப் பேசியதாகத் தகவல் வெளியாகி இருந்தது. அதன்படி, டெல்லியில் ஓ. பன்னீர்செல்வம், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று (02.12.2025) சந்தித்து ஆலோசனை நடத்திய தகவல் வெளியானது.

Advertisment

இந்த நிலையில், டெல்லியில் இருந்து திரும்பிய ஓ.பன்னீர்செல்வம் இன்று (03-12-25) சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினேன். தேவைப்படும் போது அமித்ஷாவிடம் அரசியல் பேசுவேன். தமிழகம் முழுவதும் உள்ள அரசியல் சூழ்நிலைகளைப் பற்றி அமித்ஷாவிடம் விவாதித்து வந்திருக்கிறேன்” என்று கூறினார். 

ops Amit shah O Panneerselvam
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe