விடுதலை போராட்ட வீரர்களான மருது பாண்டியர்களின் நினைவு தினத்தை ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 27ஆம் தேதியன்று சிவகங்கையில் ‘மருது பாண்டியர் குரு பூஜை’ஆக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, இன்று (27-10-25) காளையார்கோவிலில் அமைந்துள்ள மருதுபாண்டியர்களின் நினைவிடத்தில் 224வது குருபூஜை விழா நடைபெற்று வருகிறது. அதனால் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும், மருது பாண்டியர்களின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். அதன்படி முன்னாள் முதல்வரும், அதிமுக தொண்டர்கள் மீட்பு குழுவின் தலைவருமான ஓ. பன்னீர்செல்வம் மருது பாண்டியர்களின் நினைவிடத்தில் இன்று மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், விஜய் அதிமுகவுடன் கூட்டணி வைக்காமல் திமுக ஆட்சிக்கு வந்தால் தவெக காணாமல் போய்விடும் என்று ஆர்.பி.உதயகுமார் கூறியிருக்கிறாரே? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், “நீங்கள் கடந்த காலங்களை புரட்டி பார்த்தால் உதயகுமாருக்கு நான் எந்த காலத்திலும் பதில் சொன்னது இல்லை. இந்த கட்சி இந்த நிலைமைக்கு கொண்டு போய் சேர்ந்தற்கு முக்கிய காரணமே அவருடைய சுயநலம் தான்” என்று கூறினார்.
இதையடுத்து, மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறாரே? என கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “இன்றைய சூழ்நிலையில், எல்லா கட்சிகளும் பிரிந்து கிடக்கிறது. அதிமுக, பா.ம.க என அனைத்து கட்சிகளும் பிரிந்து கிடக்கிற சூழ்நிலையில், அவருக்கு தானே வாய்ப்பு இருக்கிறது. இது கண் கூட தானே தெரிகிறது. அனைத்து எதிர்கட்சிகளும் பிரிந்து கிடக்கும் போது திமுகவுக்கு தான் வாய்ப்பு இருக்கிறது என பொதுமக்கள் பேசிக் கொள்கிறார்கள். நான் பேசல சாமி, என் மேல பழியை போடாதீங்க.. யாருடைய அரசியல் வாழ்க்கையும் பிரகாசமாக இருக்கிறது என்பது மக்களுடைய கையில் இருக்கிறது. உங்கள் கையிலோ என் கையிலோ இல்லை” என்று கூறிச் சென்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/10/27/ops-2025-10-27-15-23-08.jpg)