O. Panneerselvam consultative meeting on December 23rd
டிசம்பர் 15ஆம் தேதிக்குள் அதிமுக இணைவது பற்றி முடிவு செய்ய வேண்டும், இல்லையென்றால் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று முன்னாள் முதல்வரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் அண்மையில் கெடு விதித்திருந்தார். டிசம்பர் 15ஆம் தேதிக்குள் அதிமுக இணைவது பற்றி முடிவு அறிவிக்கப்படாமல் இருந்தால் புதிய கட்சி தொடங்க கூட தயங்க மாட்டோம் என ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர் வைத்தியலிங்கம் தெரிவித்திருந்தார்.
அரசியலில் அடுத்தக்கட்ட நடவடிக்கை மற்றும் முடிவு குறித்து நிர்வாகிகளுடன் டிசம்பர் 15ஆம் தேதி கலந்து ஆலோசித்து முக்கிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்த நிலையில், அந்த அறிவிப்பு தள்ளி வைக்கப்பட்டது. அதாவது முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நினைவு தினமான டிசம்பர் 24ஆம் தேதியன்று முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று தகவல் வெளியானது.
இந்த நிலையில், டிசம்பர் 23ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். சென்னையில் பன்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.
Follow Us