தேனியில் முன்னாள் முதல்வரும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று (03-01-26) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவரிடம், தேசிய ஜனநாயகக் கூட்டணி அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு மீண்டும் இணையுமா என்று கேள்வி எழுப்பபட்டது.

Advertisment

அதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், “நாங்கள் அந்த கூட்டணியில் இருந்து வெளியே வந்துவிட்டோம். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா என்னை அழைத்தார். அவரிடம் சென்று தமிழகத்தினுடைய அரசியல் களத்தினுடைய நிலவரங்களை தெரிவித்தேன். எங்களைப் பொறுத்தவரையில் அதிமுகவில் பிரிந்து கிடக்கின்ற சக்திகள் எல்லாம் ஒன்று சேர வேண்டும். எம்.ஜி.ஆர் இந்த இயக்கத்தை உருவாக்கின்ற போது, கழகத்தினுடைய சட்ட விதியை உருவாக்கினார். அந்த சட்டவிதியின்படி தான் எம்.ஜி.ஆர் இருந்த காலம் வரை நடைமுறைப்படுத்தினார்.

Advertisment

அவருடைய மறைவுக்குப் பிறகு ஜெயலலிதா பொதுச் செயலாளராக பொறுப்பேற்று இந்த இயக்கத்தினுடைய அனைத்து சோதனைகளையும் வேதனைகளையும் தாண்டி ஒரு வலிமையான இயக்கமாக வளர்த்தெடுத்தார். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதா ஆகியோர் வளர்த்தெடுத்த இந்த இயக்கம் சிதறக்கூடாது. கழக சட்ட விதியை கேள்விக்குறியாக்கி இருக்கிறார்கள். கழகத்துடைய பொதுச் செயலாளராஇ கழகத்தினுடைய அடிப்படை தொண்டர்கள் தங்களுடைய வாக்குரிமையை அளித்து தேர்தல் மூலமாக தேர்வு செய்யப்பட வேண்டும் என்பது தான் கழகத்தினுடைய சட்டவிதி. அந்த சட்டவிதி இன்றைக்கு சின்னபின்னாமாக்கப்பட்டிருக்கிறது. அடிப்படை உறுப்பினர் என யார் வேண்டுமனாலும் கழகத்தினுடைய பொதுச்செயலாளராக போட்டியிடலாம் என்ற கழக சட்டவதி இன்றைக்கு மாற்றப்பட்டிருக்கிறது” என்று கூறினார்.