கரூரில் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி இரவு நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர்  உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisment

இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட ஆணையத்தை அமைத்து ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது. அதன்படி, சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. முன்னதாக கரூரில் இருக்கக்கூடிய சிபிஐ முகாமில் அக்கட்சி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.

Advertisment

இந்த நிலையில், டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகுமாறு தவெக நிர்வாகிகளான ஆதவ் அர்ஜுனா, என்.ஆனந்த், சி.டி.ஆர்.நிர்மல்குமார், தவெகவின் கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி நேற்று (29-12-25) காலை ஆதவ் அர்ஜுனா, என்.ஆனந்த், சி.டி.நிர்மல்குமார் ஆகியோர் சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகினர். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக 7 மணி நேரத்திற்கு மேலாக அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியதாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில், தவெக நிர்வாகிகள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல் குமார் ஆகியோர் இன்று (30-12-25) சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகினர். அவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் 2வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

Advertisment