Nutritional food workers protest across Tamil Nadu today
தமிழ்நாடு முழுவதும் இன்று (21-01-26) முதல் சத்துணவு ஊழியர்கள் சங்கத்தினர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அங்கன்வாடிகளில் பணியாற்றும் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், ஓய்வுபெறும் நாளும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சம், சமையலர் மற்றும் சமையர் உதவியாளருக்கு ரூ.3 லட்சம், காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும், குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும் என்பன உள்ளிட்ட திமுக அரசு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என இன்று முதல் தமிழகம் முழுவதும் சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக மாவட்டங்களில் உள்ள ஆட்சியர் அலுவலகம் அருகே இருக்கக்கூடிய சாலையை மறித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை ராஜாஜி சாலையில் உள்ள கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள சாலையில் 50க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் அரசுக்கு எதிராக குரல்களை எழுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய மாவட்டங்களின் தலைநகரங்களில் இந்த போராட்டம் நடைபெற்று வருகின்றது.
பொங்கல் விடுமுறை முடிந்து தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் சத்துணவு ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Follow Us