சென்னை எழிலகத்தில் சத்துணவுப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் சென்னை எழிலகத்தில் சத்துணவுப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அங்கன்வாடிகளில் பணியாற்றும் சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் சமையலர்கள், சமையல் உதவியாளர்களுக்கு தமிழக அரசு சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கி வரும் நிலையில் காலமுறை ஊதியமாக மாற்ற வேண்டும் என்றும், ஓய்வுபெறும் நாளில் சத்துணவு அமைப்பாளருக்கு 5 லட்சம் ரூபாயும், சமையலர் மற்றும் சமையல் உதவியாளருக்கு மூன்று லட்சம் ரூபாயும் தர வேண்டும் என்றும், காலி பணியிடங்கள் நிரப்பப்படாததால் தங்களுக்கு பணிச்சுமை ஏற்பட்டுள்ளது எனவே காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.