தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஒரு காலத்தில் சிகிச்சையிலும் கல்வியிலும் ரொம்பவே பெயர் பெற்றது. ஆனால் தற்போது அப்படியே தலைகீழாக மாறிவிட்டது வேதனையாக உள்ளது. மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பலர் நோயாளிகளிடம் அலட்சியமாக நடந்து கொள்வதாகத் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தது. ஏழைகள் பயனடையும் இந்த இடத்தில் நோய் ஏற்படுத்தும் வேதனையைவிட அங்குள்ள சிலரது பேச்சுகள் ரொம்பவே வேதனை அளிப்பதாக உள்ளது என்று சொல்லும் மக்கள் அதிகம்.
இப்படிப்பட்ட சம்பவம் தான் தற்போது வீடியோவாக வைரலாகி வருகிறது. பன்னோக்கு சிறப்புச் சிகிச்சை மைய கட்டடத்தில் முதலைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டத்தில் புற்றுநோய் பிரிவில் ஏராளமானோர் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்த பிரிவில் ரஞ்சிதா என்ற ஒப்பந்த செவிலியர் பணியில் இருக்கும் போது ரொம்பவே அலட்சியமாகவும், நோயாளிகளிடம் கோபமாகப் பேசுவதுமாக உள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதே போல நேற்று புற்றுநோய் பிரிவில் சிகிச்சை பெற்று வருபவர்களை உறவினர்களுடன் மருந்து கொடுக்கும் அறைக்கு அழைத்துத் தான் அமர்ந்து கொண்டு குளுக்கோஸ் ஏற்ற நரம்பில் ஊசி குத்தி குளுக்கோஸ் பாட்டிலைக் கூட வரும் உறவினர்களிடம் கொடுக்க படுக்கை வரை அந்தப் பாட்டிலைத் தூக்கிக் கொண்டு போய் படுக்கையில் படுக்க வேண்டும்.
அதே போல குளுக்கோஸ் ஏற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஒருவர் கூற அவரை திட்டிவிட்டு இனி உங்களுக்கு நான் பார்க்க முடியாது என்று சொல்லிவிட்டுச் சென்று மற்றவர்களுக்கு வழக்கம் போல ஊசி குத்தி குளுக்கோஸ் பாட்டிலை உறவினர் கையில் கொடுத்து விடுகிறார். இந்த வீடியோ வைரலான நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மருத்துவக்கல்லூரி முதல்வர் பூபதி விசாரணை செய்து ஒப்பந்த செவிலியரான ரஞ்சிதாவை பணிநீக்கம் செய்துள்ளார். மேலும் பணியில் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறி தான் பணியாளர்களை அனுப்புகிறோம். யாராவது இப்படி ஒருவர் செய்து விடுகிறார் என்றும் கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/07/tj-nurse-suspended-2026-01-07-19-55-29.jpg)