ஈரோட்டில் செவிலியர் படிப்பு மட்டுமே படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்த பெண்ணை மருத்துவத்துறை அதிகாரிகள் கொடுத்த புகாரில் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பெருமுகைபுதூர் வரப்பள்ளம் பகுதியில் ஓய்வுபெற்ற மருத்துவர் ஒருவரின் பெயரை வெளியே போர்டில் வைத்து மருத்துவமனை நடத்தி வந்த செவிலியர் பிரியாவை போலீஸ் கைது செய்துள்ளனர். எம்.பி.கே மருத்துவமனை என்ற பெயரில் செயல்பட்டு வந்த மருத்துவமனையில் ஈரோடு சுகாதாரத்துறை இணை இயக்குனர் சாந்தகுமாரி ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது பிரியா என்பவர் நர்சிங் படிப்பு மட்டுமே பயின்றுவிட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. மேலும் கஸ்தூரி என்ற ஓய்வுபெற்ற அரசு மருத்துவரின் பெயரை வெளியே உள்ள பெயர் பலகையில் வைத்துவிட்டு பிரியாவே மருத்துவம் பார்த்து வந்ததும் தெரிய வந்தது. டாக்டர் பெயர் பலகை வைப்பதற்கு அவர் லஞ்சம் கொடுத்ததாக விசாரணையில் தெரிய வந்த நிலையில் ஓய்வுபெற்ற அரசு மருத்துவரிடமும் சுகாதாரத்துறை அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.