Advertisment

என்.ஆர்.காங்கிரஸ் - விஜய் கூட்டணி;தமிழகத்தில் 10 சீட்!

Aaaa


திமுக கூட்டணியை உடைத்து காங்கிரஸ் கட்சி வெளியேறும், அக்கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்று இலவு காத்த கிளி போல காத்திருந்த விஜய்க்கு பெப்பே காட்டிவிட்டது காங்கிரஸ். இதனால் ஏகத்துக்கும் அப்செட்டானார் விஜய். 

Advertisment

தமிழகத்தில் விஜய்யுடன் கூட்டணி வைக்க பெரிய கட்சிகள் ஏதும் இல்லை. விரும்பினால் அதிமுக - பாஜக கூட்டணிக்கு போகலாம். இந்த நிலையில், புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமியோடு தொடர்பில் இருந்து வரும் விஜய், ரெங்கசாமியோடு விவாதித்துள்ளார். அப்போது, ரெங்கசாமியின் என்.ஆர். காங்கிரசோடு தமிழகத்தில் கூட்டணி அமைத்துக் கொள்ள இருவரும் முடிவெடுத்துள்ளனர். 

Advertisment

தமிழகத்தில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியை முறைப்படி துவக்கவிருக்கிறார் ரெங்கசாமி. தமிழகத்தில் என்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவராக அதிமுவின் முன்னாள் அமைச்சரும், எம்ஜிஆர் பெயரைக் கொண்டவருமான ஒருவரை தலைவராக நியமிக்கவிருக்கிறார் ரெங்கசாமி. இதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியிருக்கிறது. 

தலைவர் நியமிக்கப்பட்டதும், விஜய்யுடன் முறைப்படி, வெளிப்படையாக பேச்சுவார்த்தைத் துவங்கும். தமிழகத்தில், பாண்டிச்சேரியை ஒட்டியுள்ள விழுப்புரம், கடலூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களைச் சேர்ந்த தொகுதிகளில் 10 இடங்களில் த.வெ.க. கூட்டணியில் என். ஆர். காங்கிரஸ் போட்டியிடுவது என தீரமாணிக்கப்பட்டிருக்கிறதாம்.

puthuchery tvk vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe