Advertisment

''இப்போது சொல்கிறேன்- ஆம். ரத்தக் கொதிப்பு தான்''-எடப்பாடி பழனிசாமி காட்டம்

a5525

Now I'll tell you - yes. It's high blood pressure' - Edappadi Kattam Photograph: (admk)

சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் அமைந்துள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் நேற்று (14.10.2025) காலை 09:30 மணிக்குச் சட்டசபைக் கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் வரும் நாளை மறுநாள் வரை (17.10.2025) வரை நடைபெறவுள்ளது. இத்தகைய சூழலில் தான் இன்று (15.10.2025) 2வது நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவைக்கு இன்று கைகளில் கருப்பு பட்டை (பேட்ஜ்) அணிந்து வந்தனர். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம், கிட்னி திருட்டு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து அவையில் விவாதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கைகளில் கருப்பு பட்டை அணிந்து வந்தனர்.

Advertisment

அப்போது சபாநாயகர் அப்பாவு, “கருப்பு பட்டை கட்ட உடனே எல்லாருக்குமா ஒன்று போல பிபி கூடியிருச்சோ என்று நினைத்தேன்” எனக் கேட்டார். அதனால் அவையில் சிறிது நேரம் சிரிப்பலை எழுந்தது.

Advertisment

இந்நிலையில் 'பிபி' என சபாநாயகர் அப்பாவு பேசியதற்கு பதிலளிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி 'எக்ஸ்' வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'சட்டப்பேரவையில் நான் பேச எழுந்தாலே பதறும் பொம்மை முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி வெளிநடப்பு செய்ததும், வழக்கம் போல வெற்றுச் சுவரைப் பார்த்து வெட்டி வசனம் பேசியிருக்கிறார்.

இவரது அரசை குற்றம் சொல்ல முடியாமல் வெளியேறினோமாம். முக.ஸ்டாலின் அவர்களே- நான் கேட்ட எந்தவொரு கேள்விக்கும் பதில் சொல்லத் தெரியாமல், அமைச்சர்கள் பின்னாலும், சபாநாயகர் பின்னாலும் ஒளிந்து கொண்டு, இப்போது உங்களுக்கு இந்த சினிமா வசனம் எல்லாம் தேவையா?

"எத்தனைக் காவலர்கள் கரூர் த.வெ.க. கூட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள்?" என்ற கேள்விக்கு கூட, உங்களின் பதிலுக்கும், உங்கள் காவல்துறையின் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அளித்த பதிலுக்கும் முரண்பாடு இருக்கிறது. சட்டப்பேரவையில் கூட தெளிவான பதில் அளிக்க முடியாத நீங்கள்,கரூர் சம்பவத்தை எந்த லட்சணத்தில் விசாரித்து இருப்பீர்கள் என்பதை தமிழக மக்கள் இன்று உணர்ந்திருப்பர்.

கரூர் துயரத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தாரின் துக்கத்தில் பங்கேற்கும் வகையிலும், அவர்களின் சொல்லொண்ணா வலிகளையும் வேதனைகளையும் வெளிப்படுத்தும் வகையிலும் கருப்பு பட்டை அணிந்தால், அதையும் கிண்டல் செய்யும் தொனியில் உங்கள் சபாநாயகரும், அமைச்சரும், மிகக் கேவலமாகப் பேசினர். "ஆறு மாதத்தில் ஆட்சி போனதும், சிறை சென்றுவிடுவோமோ?" என்ற பயத்திலேயே உங்கள் அமைச்சர்கள் திரிவதாலோ என்னவோ, கருப்புப் பட்டையைக் கண்டால் கூட அவர்களுக்கு சிறை ஞாபகம் தான் வருகிறது.

16-வது சட்டப்பேரவையில் உறுப்பினர் எல்லோரையும் சேர்த்து பேசியதை விட, அதிகமாக பேசிய பெருமைக்குரிய சபாநாயகரோ, கருப்புப் பட்டையைப் பார்த்து "ரத்தக் கொதிப்பா?" என்று கேட்கிறார். இப்போது சொல்கிறேன்- ஆம். ரத்தக் கொதிப்பு தான். ஒரு திறனற்ற அரசின் அலட்சியத்தால் 41 உயிர்களை இழந்த கோபத்தில் ரத்தம் கொதித்து தான் கருப்பு பட்டை அணிந்தோம்.

இந்த துயரத்தில் கூட கூச்சமே இல்லாமல் உங்கள் திமுக அரசு அரசியல் செய்கிறதே... அந்த ரத்தக் கொதிப்பில் தான் கருப்புப் பட்டை அணிந்தோம். ஸ்டாலின் அவர்களே- இன்று நீங்கள் ஒரு முதல்வராக பொறுப்போடு பேசுவீர்கள் என்று எண்ணினேன். ஆனால் நீங்களோ, உங்கள் கருர் சட்டமன்ற உறுப்பினர் நடத்திய செய்தியாளர் சந்திப்பின் Version 2.0 போல பேசியுள்ளீர்கள். உண்மை சுடும் என்பதை மட்டும் நினைவில் கொள்க' என தெரிவித்துள்ளார்.

karur stampede tvk vijay admk dmk
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe