தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் நேற்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வரக்கூடிய நேரத்தில் சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும், காவிரிப்படுகை மாவட்டங்களிலும் மழை அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Advertisment

இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் கொடுத்திருக்கும் தகவலின் படி வங்கக்கடலில் இன்று உருவாகும் என கணிக்கப்பட்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகாது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த பகுதி அதே நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் கரையை கடக்க இருப்பதால் கடலோர மாவட்டங்களில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisment
வரக்கூடிய அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழ்நாட்டின் உடைய கடலோரப் பகுதி மற்றும் ஆந்திர கடலோர பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கரையை கடந்து செல்ல வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால்  ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு கொடுக்கப்பட்ட 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை நீடிப்பதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் மழை பொழிவுக்கான வாய்ப்பு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மற்ற மாவட்டங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள கனமழை எச்சரிக்கை தொடர்வதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் அதி கனமழையின் தீவிர தன்மை குறைந்து கனமழை என்ற அளவிலேயே நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.