Advertisment

'இன்னும் அழைக்கவில்லை; நல்ல முடிவை தலைமை எடுக்கும்'-கிரிஷ் ஜோடங்கர் பதில்

218

'Not invited yet; leadership will take a good decision' - Krish Jodankar's response Photograph: (congress)

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை, விருப்ப மனு, தொகுதிப் பங்கீடு, தேர்தல் பிரச்சாரம் என தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே திமுக கூட்டணியில் இருக்கும் தமிழக காங்கிரஸ் கட்சிக்குள், ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
Advertisment
ராகுல் காந்தியின் நெருங்கிய வட்டாரத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தரவு மேலாண்மை மற்றும் வல்லுநர் குழுவின் தலைவரான பிரவீன் சக்கரவர்த்தி, தவெக தலைவர் விஜய்யை சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தமிழக சட்டமன்றத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் கடந்த 17 ஆம் தேதி  டெல்லியில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் குமார், கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் திமுக கூட்டணியில் எத்தனை தொகுதிகள் கேட்பது? எந்தெந்த தொகுதிகள் கேட்பது? உள்ளிட்ட தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
Advertisment
219
'Not invited yet; leadership will take a good decision' - Krish Jodankar's response Photograph: (congress)
இந்த சந்திப்புக்குப் பிறகு அன்றைய தினம் காங்கிரஸ் நிர்வாகி கே.சி.வேணுகோபால் முன்னிலையில் மற்ற தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது கே.சி.வேணுகோபால், ''நிர்வாகிகள் அனைவரது கருத்துக்களையும் தலைமை பரிசீலிக்கும். காங்கிரஸ் நிர்வாகிகள் பொதுவெளியில் கூட்டணி குறித்து கருத்துச் சொல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கூட்டணி குறித்து அறிக்கைகள் விடுவது, வலைத்தளங்களில் பதிவிடுவது போன்று செய்ய வேண்டாம் என தலைமை அறிவுறுத்தி உள்ளது. கூட்டணி குறித்தும், தொகுதிப் பங்கீடு குறித்தும் தேசிய தலைமை என்ன முடிவு எடுக்கும். இதனைத் தமிழக காங்கிரஸ் பின்பற்றும்'' என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று சென்னை ராயப்பேட்டையில் காங்கிரஸ் மேலிடபொறுப்பாளர் கிரிஷ் ஜோடாங்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது காங்கிரஸ்-திமுக கூட்டணி தொடருமா என்ற கேள்விக்கு, ''இன்னும் திமுக எங்களை கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. ஏற்கனவே கூட்டணியில் இருப்பதால் பேச்சுவார்த்தைக்கு அழைக்குமாறு நேரடியாக சென்று சந்தித்து வந்தோம். ஆனால் இன்று வரை திமுக எங்களை அழைக்காத நிலை இருக்கிறது. காங்கிரஸ் சுதந்திரமான கட்சி. 2026 சட்டமன்ற தேர்தல் குறித்து காங்கிரஸ் தலைவர்களிடம் தலைமை கருத்துக் கேட்டுள்ளது. நல்ல முடிவை தலைமை எடுத்து அறிவிக்கும்'' என்றார்.

congress dmk alliance parties Election Selvaperunthagai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe