ராமேஸ்வரம் பாம்பனில் விசைப்படகில் மீன்பிடிக்க சென்றவருக்கு பெரிய இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது இரண்டு கூறல் மீன்கள். இந்தோ பசிபிக் பகுதிகளில் மட்டும் அதிமாக காணப்படும் அரிய வகை மீன்களில் ஒன்று கூறல். உணவுக்கு பயன்படாத இந்த வகை மீன்கள் விலை லட்சக் கணக்கில் போகிறது. காரணம்தான் என்ன?

Advertisment

ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் கடல் பகுதியில் விசைப்படகில் காரல் என்ற மீனவர் வழக்கம்போல மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இரண்டு கூறல் மீன்கள் சிக்கின. 22 கிலோ மற்றும் 24 கிலோ என மொத்தம் 46 கிலோ எடைகள் கொண்ட அந்த இரண்டு மீன்கள் கிலோ 3,600 ரூபாய் என்ற வீதம் என மொத்தமாக ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கு விலை போயுள்ளது.

Advertisment

உணவிற்காக பயன்படுத்தப்படாத இந்த மீன்ககள்  அதிக விலைக்கு காரணம் கூறல் மீனின் வயிற்றுப் பகுதியில் டியூப் போன்ற அமைப்பு தான். இந்த அமைப்பு  மீன்வர்களால் பண்ணா என்று அழைக்கப்படுகிறது. இது பல்வேறு மருத்துவ பயன்பாடுகளுக்கு அதிகம் தேவைப்படுவதால் இதன் விலை அதிகமாக உள்ளது. குறிப்பாக அறுவை சிகிச்சைக்கு பின்னர் தையல் இடும் நூலிழைப் போன்ற பொருளை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றுவதாக கூறப்படுகிறது. எந்த அளவிற்கு பெரிய மீனாக பிடிபடுகிறதோ அந்த அளவிற்கு பண்ணா என்ற அந்த குழல் பகுதி பெரிதாக இருக்கும். அதனால் பெரிய மீன்கள் அதிகமாக லட்சக் கணக்கில் விலைக்கு போகும் என்கின்றனர் மீனவர்கள்.

கடல் தங்கம், கருந்திட்டு கத்தாளை என்ற மாற்றுப்பெயர்களை கொண்டுள்ள இந்த கூறல் மீன்கள் ஆஸ்திரேலேய கடல் பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது. இந்த மீன் இதய சிகிச்சையிலும், மதுபானங்களுக்கு சுவையூட்டியாகவும்  பயன்படுத்தப்படுகிறது என்ற மித்தும் உள்ளதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisment

கூறல் சிக்கினால் எப்போதும் இன்ப அதிர்ச்சிதான் மீனவர்களுக்கு...