Northern State youth arrested for drinking alcohol on a moving train Photograph: (chennai)
மின்சார ரயிலில் வடமாநில இளைஞர்கள் மது அருந்திய காட்சிகள் வைரலான நிலையில் அவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் இருந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நோக்கி வந்த மின்சார ரயிலில் வடமாநில இளைஞர்கள் இருவர் ரயிலின் கதவு பகுதியில் அமர்ந்து மது அருந்திக்கொண்டு அலப்பறை செய்வதாக பயணிகள் ரயில்வே போலீசாருக்கு புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து சென்னை கொருக்குப்பேட்டை பகுதிக்கு ரயில் வந்தவுடன் சம்பந்தப்பட்ட பெட்டிக்கு சென்ற ரயில்வே போலீசார் இரண்டு இளைஞர்களையும் பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது.