சென்னையை அடுத்துள்ள காட்டுப்பள்ளியில் தனியாருக்குச் சொந்தமான பிரபல கப்பல் கட்டும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு 6000க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் ஒருவராகவும், ஒப்பந்த தொழிலாளராகவும் உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அமர் பிரசாத் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு இவர் தங்கியுள்ள வீட்டின் மாடியில் ஏறும்போது தவறி விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காட்டூர் காவல் துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காகச் சென்னை அரசு ஸ்டாலின் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Advertisment

மற்றொருபுறம் வடமாநில தொழிலாளி உயிரிழந்தது குறித்து உரிய முறையின் விசாரணை நடத்த வேண்டும். அவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என க் கூறி ஆயிரத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதாவது காட்டுப்பள்ளி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே அங்குப் பதற்றமான சூழல் நிலவியது. அதோடு அதிகாரிகளும் போராட்டத்தில் ஈடுபட்ட வட மாநில தொழிலாளர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டன. அப்போது அவர்கள், “உயிரிழந்தவரின் சடலத்தை ஒப்படைக்க வரவேண்டும். அவரது உடலைக் காட்ட வேண்டும். இழப்பீடு வழங்க வேண்டும்” எனத் தெரிவித்தனர். 

அதே சமயம் வட மாநிலத்தவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் காவல்துறை மீது வட மாநிலத்தவர் கள் அவர்கள் கற்களை வீசினார். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதன் காரணமாக வட மாநிலத்தவர் கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டு வீசியும், தடியடி நடத்தியும் காவல் துறையினர் விரட்டியடித்து நடவடிக்கை எடுத்தனர். இந்த தாக்குதலில் காவல் துணை ஆணையர் உட்பட 10க்கும் மேற்பட்ட காவல் துறையினர் காயம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட வடமாநில தொழிலாளர்களிடம் சமரசம் செய்ய சென்ற காவல் துறையினர் மீது கற்களை வீசியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.இ தனையடுத்து காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியது தொடர்பாக வட மாநில தொழிலாளர்கள் மீது 6 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.