ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் இயந்திரத்தில் சிக்கி வடமாநில பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் காளிச்சரண்முரா. இவரது மனைவி புஷ்பா முரா (39). இவரும் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தங்கி அங்குள்ள ஒரு தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர்.இந்தநிலையில் நேற்று புஷ்பா முரா தொழிற்சாலையில் வழக்கம்போல் வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.

Advertisment

அப்போது எதிர்பாராத விதமாக புஷ்பா முரா இயந்திரத்தில் சிக்கிக் கொண்டார். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் பெருந்துறை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று புஷ்பா முராவின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.