சாலையில் வடமாநில பெண்கள் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டு சண்டையிட்டு கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சேலம் மாவட்டம் நெத்திமேடு பகுதியில் பாட்டில் சுத்தம் செய்யும் தனியார் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களும் வேலை பார்த்து வருகிறது. குறிப்பாக குஜராத், மகாராஷ்டிரா, பீகார் போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஏராளாமானோர் அந்த பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து அந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர்.

Advertisment

இந்த சூழ்நிலையில் அந்த நிறுவனத்தில் வேலை செய்யும் வடமாநில பெண்களுக்கு இடையே சில நாட்களாக மோதல் போக்கு நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது. இரு தரப்பினராக பிரிந்து அவ்வப்போது சண்டையிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இன்று வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக காலையில் ஒரு தரப்பு பெண்கள் ஆட்டோவில் ஏற முயன்றுள்ளனர். அப்போது மற்றொரு தரப்பு பெண்கள் அங்கு வந்து, வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் உச்சிக்கே சென்று கைகலப்பாக மாறி மோதல் ஏற்பட்டுளது.

இந்த மோதலில் இரு தரப்பைச் சேர்ந்த பெண்களும் ஒருவருக்கொருவர் முடிகளைப் பிடித்து இழுத்து அடித்துக் கொண்டும், சாலையில் புரண்டு எட்டி உதைத்துக்கொண்டும் சண்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனை கண்ட பொதுமக்கள் அங்கு கூடி வந்து இரு தரப்பினரையும் பிரித்து சமாதனப்படுத்த முயன்றுள்ளனர். ஆனாலும் அவர்கள் சமாதானம் ஆகாததால் பொதுமக்கள் அருகில் இருந்த காவல்நிலையத்தில் தகவல் அளித்தனர். தகவலறிந்த காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். 

Advertisment