ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத சுவாமி கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இதில் வட மாநிலத்தவர்களும் கணிசமாக வந்து வழிபாடு செய்கின்றனர். அவர்கள் பெரும்பாலும் ரயில் மூலமே தங்கள் குடும்பங்களோடு அதிக பொருட்களை எடுத்து வருகின்றனர்.
அந்த வகையில் நேற்று காலை 6:50 மணிக்கு மதுரையிலிருந்து ராமேஸ்வரம் சென்ற ரயிலில் வழக்கம்போல் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். அப்போது இரண்டு டிக்கெட் பரிசோதகர்கள் பக்தர்களிடம் பரிசோதனை மேற்கொண்டனர். இதில் வடமாநிலத்தை சேர்ந்த 80 பேரிடம் டிக்கெட் இல்லாததால் தலா ரூ.300 வீதம் மொத்தம் ரூ.24, 600 அபராதம் விதித்தனர்.
மேலும் மற்ற வட மாநில பயணிகளிடமும் சோதனை மேற்கொள்ள அவர்கள் புறப்பட்ட நிலையில் அவர்கள் ஒன்றாக சேர்ந்து ‘ஜெய் ஹோ... ஜெய் ஹோ...’ என கோஷமிட்டனர். பின்பு அபராதம் செலுத்தாமலே சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தற்போது ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Follow Us