மாநிலங்களவை உறுப்பினர்களான என். ஆர். இளங்கோ, பி. செல்வராசு, எம். தம்பிதுரை, திருச்சி சிவா, கனிமொழி என்.வி.என். சோமு மற்றும் ஜி.கே. வாசன் ஆகியோரின் பதவிக்காலம் ஏப்ரல் 2ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. எனவே இந்த காலி இடங்களுக்கான தேர்தல் மார்ச் 16ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் திமுகவிற்கு 4 இடங்களும், அதிமுகவிற்கு 2 இடங்களும் கிடைக்க உள்ளன.
அதன்படி, இந்த தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் மற்றும் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவில் எல்.கே.சுதீஷ், காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக் ஆகியோர் நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தனர். அதே போல், அதிமுக சார்பில் தம்பிதுரை மற்றும் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க சார்பில் அன்புமணி ஆகியோர் இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தனர். அதனை தொடர்ந்து அன்புமணிக்கு போட்டியாக அவரது தந்தையும் பா.ம.க நிறுவனருமான ராமதாஸ் தரப்பில் அவரது உதவியாளர் சாமிநாதன் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவை முன்மொழிய 10 சட்டமன்ற உறுப்பினர்கள் தேவை. அதன்படி திமுக, அதிமுக தரப்பில் தாக்கப்பட்டுள்ள வேட்புமனுவை முன்மொழிய போதுமான சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பதால் அந்த கட்சிகளினுடைய வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அப்படி இருக்கும் பட்சத்தில் பா.ம.கவுக்கு 5 சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தாலும் அன்புமணி - ராமதாஸ் ஆகியோரின் மோதல் போக்கால் சட்டமன்ற உறுப்பினர்கள் இருதுருவமாக இருக்கின்றனர். அந்த வகையில் ராமதாஸுக்கு 2 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே ஆதரவு நிலையில் இருப்பதால் அவரது தரப்பு வேட்பாளர் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு குறைவு என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், திமுக மற்றும் அதிமுக அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. திமுக, அதிமுக, அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் மொத்தம் 12 பேர் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர். அதில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில் 4 வேட்பாளர்களும், அதிமுக அதன் கூட்டணி கட்சியான பா.ம.க சார்பில் 2 வேட்பாளர்களும் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர். இது தவிர ராமதாஸ் தரப்பு உள்பட 6 சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த நிலையில் சுயேட்சை வேட்பாளர்களுடைய வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. ராமதாஸ் தரப்பு சார்பில் அவருடைய உதவியாளர் சாமிநாதன் தாக்கல் செய்த வேட்புமனுவும் தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/28/2026-02-28t064820155z-nlogo-2026-02-28-12-18-18.jpg)
/nakkheeran/media/media_files/2026/03/06/ramadosss-2026-03-06-16-37-58.jpg)