வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே பனமடங்கி இந்திரா நகரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சீனு. வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார்.

Advertisment

வாடகை ஆட்டோ ஓட்டி குடும்பத்தை நடத்திவந்த அவர், அதில் போதிய வருவாய் இல்லாததால் ஆட்டோ உரிமையாளருக்கு வாடகை பணம் கட்ட முடியாத சூழலில் ஆட்டோவை ஓனர் எடுத்துச் சென்றதாகவும் இதனால் தினசரி குடும்பத்தை நடத்தவே வழியில்லாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதாகவும் மேலும் பனமடங்கி பகுதியில் உள்ள அடகுக்கடை ஒன்றில் 10-சவரன் தங்க நகைகளை சில ஆண்டுகளுக்கு முன்பு அடகு வைத்து, அதை மீட்கச் சென்ற போது 10-சவரன் நகையும் வட்டிக்கு முழுகி விட்டது எனக்கூறி அடகுக் கடை உரிமையாளர்  ஏமாற்றிவிட்டதாகவும் கூறி தீக்குளிக்க முயற்சி செய்தார்.

Advertisment

இதுகுறித்து சத்துவாச்சாரி காவல்துறைக்கு தகவல் அளித்த நிலையில் விரைந்து வந்த காவல்துறையினர், சீனு மீது தண்ணீர் ஊற்றி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.