'No party has invited us so far' - Premalatha Vijayakanth interview Photograph: (dmdk)
தமிழகத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல் விரைவில் வர உள்ளதையொட்டி அனைத்து கட்சிகளும் மும்மரமாகத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. எதிர்க்கட்சித் தலைவர் கடந்த ஆண்டு முதலே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனைத் தொடர்ந்து, அனைத்து கட்சிகளும் தேர்தல் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வரும் வேளையில் தேமுதிகவும் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, சமீபத்தில் தேமுதிக சார்பில் மாநாடு நடத்தப்பட்டது. அம்மாநாட்டில் பெருவாரியான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியது. முன்னதாக அம்மாநாட்டில், தேமுதிக எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என அறிவிக்கப்படும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார். ஆனால், அந்த அறிவிப்பு வெளியாகவில்லை. இது அக்கட்சியின் தொண்டர்களுக்கு ஏமாற்றத்தை அளித்தது.
இந்நிலையில் தற்போது, செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், "கூட்டணி குறித்து பேசுவதற்கு இதுவரை எந்த கட்சியும் எங்களை அழைக்கவில்லை. இதுவரை எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து, நாங்கள் இறுதியான முடிவை உறுதி செய்யவில்லை. எங்கள் கட்சியின் நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்த பின்னரே கூட்டணி குறித்து முடிவு செய்வோம். பாஜகவின் மூத்த தலைவர் பியூஷ் கோயல் எதற்காக சென்னை வந்துள்ளார் என்பது எங்களுக்கு தெரியாது. கூட்டணி பேச்சுவார்த்தைக்கு பாஜக எங்களை அழைத்ததாக வந்த தகவல் உண்மையல்ல. நாங்கள் எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை விரைவில் அறிவிப்போம்" என்று தெரிவித்தார்.
Follow Us