'No matter what you tell and deceive, people won't believe you' - Ramadoss Silent Attack Photograph: (pmk)
10.5 சதவீத இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி தலைநகர் சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக பாமக தலைவர் ராமதாஸ் அறிவித்திருந்தார். அதன்படி மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடைபெற்றது. சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் ராமதாஸ் கலந்து கொண்டார். உடன் ஜி.கே.மணி, காந்திமதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
போராட்டத்தில் ராமதாஸ் பேசுகையில், ''ஒரே ஒரு கட்சிதான் பாட்டாளி மக்கள் கட்சி. அது இதுன்னு எதையோ சொல்லி ஏமாத்துவாங்க. ஆனால் மக்கள் ஏமாற மாட்டார்கள். இந்த கூட்டத்தைப் பார்த்தாலே தெரியும். இதெல்லாம் தானாக வந்த கூட்டம். தானாக துடிப்போடு வந்த கூட்டம். வெறித்தனத்தோடு வந்த கூட்டம். இட ஒதுக்கீடு அடைந்தே தீருவோம் என்ற எண்ணத்தோடு வந்த கூட்டம். அதனாலே இங்கே இருப்பவர்கள், மேடையில் இருக்கின்றவர்கள், வந்திருக்கின்ற பாட்டாளி சொந்தங்கள் யாரும் வேஷதாரிகள் அல்ல. எங்களுக்கு வேஷம் போடவும் தெரியாது. இதையெல்லாம் உணர்ந்து தமிழகம் முன்னேற இதைத் தவிர வேற வழி இல்லை என்று இந்த நேரத்திலே கூற நினைக்கிறேன். இவ்வளவு சிரமப்பட்டு கஷ்டப்பட்டு நீங்கள் எல்லாம் இந்த அறப்போராட்டத்திற்கு வந்துள்ளீர்கள். உங்களை இந்த நேரத்திலே அன்போடு பாராட்டுகின்றேன். பாராட்ட வார்த்தைகளே இல்லை. அந்த அளவு அவருக்கு நீங்கள் மிகச் சிரமப்பட்டு வந்திருக்கின்றீர்கள்'' என்றார்.
Follow Us