ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. இதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் வந்திருந்த நூற்றுக்கணக்கான மக்கள் தங்களது பிரச்சினைகள் குறித்த மனுக்களை கலெக்டரிடம் வழங்கினர். அப்போது ஈரோடு சென்னிமலை ஈரோடு,
காந்தி நகரைச் சேர்ந்த பொதுமக்கள் வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.அதில் அவர்கள் கூறியிருப்பதாவது, சென்னிமலை சாலையில் உள்ள காந்தி நகரில் புதிதாக எப்எல் 2 பார் அமைப்பதற்கான புதிய கட்டிடம் துரிதமாக வேலை நடந்து வருகிறது.எங்கள் பகுதியில் காந்திநகர் மற்றும் ஜி பி டி எல் நகரில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம்.ஏற்கனவே இப்பகுதியில் டாஸ்மாக் கடை சென்னிமலை ரோடு காந்தி நகர் அருகே செயல்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் நடமாட முடியாத சூழ்நிலை உள்ளது. இதன் அருகாமையில் புதிதாக எஃப் எல் டு பார் திறக்கப்பட்டால் மேலும் பொது மக்களுக்கு நிம்மதி இல்லாத சூழ்நிலை உருவாக காரணமாகி விடும்.
எனவே தாங்கள் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து திறக்க இருக்கும் புது மதுபான கடைக்கு அனுமதி அளிக்கக்கூடாது என பொதுமக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். அதையும் மீறி இந்த பகுதியில் புது மதுபான கடை திறக்கப்பட்டால் பொதுமக்கள் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்துவார்கள் என்பதையும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறோம் இவ்வாறு அவர்கள் அதில் கூறியுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/02/16/b29-2026-02-16-23-06-35.jpg)