சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலின் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞர் நகை திருட்டு வழக்கில் போலீசாரால் தாக்கி உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் நகை காணாமல் போனதாக புகார் கொடுத்த சிவகாமி என்ற மூதாட்டி மீதும், நிகிதா என்ற பெண் மீதும் கல்லூரி பேராசிரியர் ஒருவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கியிருந்தார். அந்த பேராசிரியர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ''அஜித் குமாரின் உயிரிழப்பிற்கு என்னுடைய இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். 2010 ஆம் ஆண்டு என்னுடைய பிஎட் ஸ்டுடென்ட் நிகிதா. அதன் மூலமாகத்தான் அந்த குடும்பத்தில் எனக்கு அறிமுகமானது. அவர்கள் என்னுடைய உறவினர்களும் கூட. கோவிலில் நடக்க முடியாமல் நாடகம் போட்ட சிவகாமி அம்மையார் எனக்கு நைட் 11:45க்கு போன் செய்து இரண்டே நாளில் அரசு வேலை உடனடியாக ஒன்பது லட்சம் கொண்டு வாங்க வேலை வாங்கி தந்து விடுகிறோம் என சொன்னார்.
நான் எம்காம், எம்.எட், எம்.பில் முடித்திருந்தேன். உடனடியாக இரண்டே நாளில் வேலை. நீ ரத்த சொந்தம் என்பதால் கூப்பிடுகிறேன். நீ வந்து அப்பாவை பாரு என்றனர். அவருடைய அப்பா பேரு ஜெயப்பெருமாள். முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஒன்பது லட்சம் கேட்டார்கள் கொடுத்தோம். வேலை கேட்ட பொழுது கொஞ்சம் பொறுங்க எலக்சன் அனௌன்ஸ் பண்ணிட்டாங்க என்றார்கள். ஆனால் சில காலத்தில் அப்படியே குடும்பத்துடன் தலைமறைவாகி விட்டார்கள். கஞ்சிக்கு வழியில்லை பணத்தை கொடுங்கள் என கேட்கும் பொழுது செத்தாலும் பரவாயில்லை ஒரு ரூபாய் கொடுக்க முடியாது என விரட்டி விட்டார்கள்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/07/04/a4280-2025-07-04-09-55-11.jpg)
என்னிடம் மட்டுமல்லாது ஆலம்பட்டியை சேர்ந்த முருகேசன், முத்துக்கொடி, வசந்தம் நகரில் உள்ள ஒரு பேங்க் எம்ப்ளாயி. அவர் ஒரு மாற்றுத்திறனாளி. அவரிடம் பையனுக்கு வேலை வாங்கி தருவதாக ரிட்டயர்மென்ட் பெனிஃபிட் பணத்தை அவர்களிடம் கொடுத்திருக்கிறார்கள். நிகிதாவுடைய காலேஜில் வேலை செய்த லேப் அட்டண்டர் பையனுக்கு வேலை வாங்கித் தருகிறேன் என்று சொல்லி நிகிதா பணம் வாங்கி இருக்கிறார்' என கண்ணீருடன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நிகிதாவால் ஏமாற்றப்பட்ட பலர் தங்களுக்கு நேர்ந்த மோசடிகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில் நிகிதாவால் தனக்கு நேர்ந்த திருமண மோசடி குறித்து திருமாறன் ஜி தெரிவித்துள்ளார். 'நிகிதா அஜித்குமார் மீது கொடுத்த புகாரே பொய்யானதாக கூட இருக்கலாம்' என இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனர் திருமாறன் ஜி பரபரப்பு தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/07/04/a4297-2025-07-04-09-56-20.jpg)
இது குறித்து அரசியல் பிரமுகரான திருமாறன் ஜி தெரிவிக்கையில், ''நிகிதா என்ற பெண்ணை எனக்கு 21 ஆண்டுகளுக்கு முன்பே தெரியும். அவர் செய்த திருமணம் மோசடியில் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். திருமணம் செய்து எல்லாவற்றையும் ஏமாற்றி தாலி கட்டிவிட்டு ஓடி விட்டார்கள். இவர்தான் அந்த நிகிதா என தெரிந்திருந்தால் அப்போதே சொல்லி இருப்பேன் இந்த புகார் பொய்யானதாக இருக்கும். கண்டிப்பான முறையில் பணம், நகையை இவர்கள் தொலைப்பதற்கு வாய்ப்பில்லை. ஏதோ அஜித்குமாருக்கும் இவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கும். அதில் பழி வாங்க புகார் கொடுத்திருப்பார்கள். பல்வேறு குடும்பங்களில் வேலை வாங்கித் தருவதாக மிரட்டி இருக்கிறார்கள். அவங்க அப்பாவே என்னிடம் 10 லட்சம் வாங்கிக் கொண்டுதான் டைவர்ஸ் கொடுத்தார். அதிகாரம் அற்றவர்களை அச்சுறுத்துவதே இவர்களுடைய வேலையாக வைத்திருக்கின்றார்கள். இவர்களை இதோடு முடித்து விட வேண்டும். இந்த குடும்பம் வெளியே வரக்கூடாது. இந்த கொலை வழக்கில் இவர்களை முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும்' என்றார்.