Delhi car blast case
தலைநகர் டெல்லியின் முக்கிய அடையாளமாகவும் இந்தியாவின் முக்கியப் பகுதியாகவும் உள்ள செங்கோட்டையில் பல்வேறு கட்ட பாதுகாப்புகளை மீறி நிகழ்ந்த கார் குண்டு வெடிப்பு சம்பவம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவத்தை, இதுவரை 15 பேர் உயிரிழந்த நிலையில், இது குறித்து என்.ஐ.ஏ தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
கார் வெடிப்புக்கு முன்னதாக கடந்த 10ஆம் தேதி நண்பகலில் ஹரியானாவில் உள்ள அல் ஃபலோ என்ற மருத்துவக் கல்லூரியில் ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா காவல்துறையினர் சேர்ந்து நடத்திய தேடுதல் வேட்டையில் ஒரு ஏகே 47 துப்பாக்கியும், 8 குண்டுகள், 360 கிலோ வெடி பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதில் அதீல் அகமது ராதர், முசாமில் ஷகீல் என்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இருவரும் மருத்துவர்கள் என தெரிந்தது. பேட்டரியுடன் 20 டைமர்கள், 24 ரிமோட்டகள் கைப்பற்றப்பட்டதால் வெடிகுண்டு தாக்குதலுக்கான முயற்சியா என்ற அச்சம் டெல்லியில் மேலோங்கி இருந்தது.
அதனைத் தொடர்ந்து அன்று இரவே செங்கோட்டை முதலாவது நுழைவாயில் அருகே நிறுத்தப்பட்டிருந்த வெள்ளை நிற ஐ 20 கார் ஒன்று, பயங்கர சத்தத்துடன் திடீரென வெடித்துச் சிதறியது. இதில் 12 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட காரை ஓட்டி வந்தவர் மருத்துவர் முகமது உமர் நபிஎன தகவல் வெளியாகியது. அதன்படி, மருத்துவர் முகம்து உமர் நபியை கைது செய்து விசாரணை நடத்தி வந்தது. அதனை தொடர்ந்து, இந்த சம்பவத்தை முதல் முறையாக தற்கொலைப் படை என்று அறிவித்து, மருத்துவர் உமர் நபிக்கு உதவியதாகக் கூறி காஷ்மீரைச் சேர்ந்த ஆமீர் ரஷீத் அலி என்பவரை என்.ஐ.ஏ நேற்று கைது செய்தது. காஷ்மீரின் சம்பூரா பகுதியை சேர்ந்த ஆமீர், காரை இயக்கிய முகமது நபியுடன் சேர்ந்து இந்த தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்ததாகவும், அதற்கு தனது காரை கொடுத்து உதவியதாகவும் கூறி ஆமீரிடம் ன்.ஐ.ஏ விசாரணை நடத்தி வந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கில் திடீர் திருப்பமாக கைது செய்யப்பட்ட 3 மருத்துவர்கள் உள்பட 4 பேரை என்.ஐ.ஏ நேற்று (16-11-25) விடுவித்துள்ளது. முக்கிய குற்றவாளி என கைது செய்யப்பட்ட மருத்துவர் உமர் அலி நபிக்கும், ஃபரிதாபாத்தின் அல் ஃபலோ பல்கலைக்கழக மருத்துவர்களுக்கும் இந்த சம்பவத்தில் எந்த தொடர்பும் இல்லை என கூறி 3 நாள் தொடர் விசாரணைக்கு பிறகு அவர்களை என்.ஐ.ஏ விடுவித்துள்ளது.
ஆரம்ப விசாரணையில் சந்தேகம் எழுந்திருந்தபோதிலும், கிடைத்த டிஜிட்டல் ஆதாரங்கள் மற்றும் தொடர்பு பதிவுகளில் குற்றத் தொடர்பு எதுவும் உறுதியாகவில்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெடிப்புடன் தொடர்புடைய நிதி பரிமாற்றங்கள், சந்தேகமான பயணப் பதிவுகள், டிஜிட்டல் சாட்சிகள் (மொபைல், லேப்டாப், கிளவுட் டேட்டா) வெடிமருந்து பொருட்கள் எதுவும் இல்லை என்று நிரூபிக்கப்பட்டதால், நான்கு பேரும் நவம்பர் 16-இல் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், தாக்குதலுக்குப் பின்னாலுள்ள செயல் அமைப்பை அடையாளம் காண என்.ஐ.ஏ முக்கிய தேடல்களை தொடர்கிறது.
Follow Us