Advertisment

'அடுத்த அதிருப்தியா...?'-டிஎஸ்பி பரபரப்பு கடிதம்

a4529

'Next dissatisfaction...?' - DSP's sensational letter Photograph: (trichy)

திருச்சி மாவட்ட காவல்துறையில் மாவட்ட குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வருபவர் பரத் ஸ்ரீனிவாஸ். உதவி ஆய்வாளராக 1997 ஆம் ஆண்டு பணியில் சேர்ந்து தற்போது டிஎஸ்பி ஆக பதவி உயர்வு பெற்று பணியாற்றி வருகிறார். இந்நிலையில் குடும்ப சூழ்நிலை மற்றும் மன உளைச்சல் காரணமாக தொடர்ச்சியாக தான் பணி செய்ய முடியாததால் எனக்கு விருப்ப ஓய்வு வேண்டும் என உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

Advertisment

இந்த கடிதம் திருச்சி காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தனிப்பட்ட ரீதியான மன உளைச்சலா அல்லது பணிச்சுமையா என்பது குறித்து முழுமையான விவரங்கள் தெரியவில்லை. அண்மையில் மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு டிஎஸ்பி சுந்தரேசன் தனக்கு உயரதிகாரிகளால் பல்வேறு அழுத்தங்கள் இருப்பதாகவும்  அதிகாரிகள் மிரட்டுவதாகவும் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்த  நிலையில், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத் தகுந்தது.

DSP police trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe