தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது தொடங்கி உள்ளது. பல்வேறு மாவட்டங்களில் மழை பொழிந்து வருகிறது. சென்னை விழுப்புரம், திருவண்ணாலை, மயிலாடுதுறை உள்ளிட்ட விட்டுவிட்டு மழை பொழிந்து வருகிறது. தொடர்ந்து தமிழகத்திற்கு மழை வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று இரவு 7 மணி வரை 19 மாவட்டங்களுக்கு மழை வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வெளியான அறிவிப்பின்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, கன்னியாகுமரி, நாகை, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல், தென்காசி உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மிதமான மற்றும் பரவலான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.