New Year's Eve party in government hospital - viral video Photograph: (sivakangai)
2026 ஆம் ஆண்டிற்கான புத்தாண்டை வரவேற்கும் விதமாக கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி பல்வேறு இடங்களில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு கொண்டாட்டங்கள் நடைபெற்றிருந்தது. இந்நிலையில் அரசு மருத்துவமனையில் மதுவுடன் அசைவ பார்ட்டி நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவசரத்திற்காக மருத்துவமனைக்குச் சென்ற நபர் ஒருவர் எடுத்த அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
சிவகங்கை மாவட்டம் செம்பனூர் அரசு மருத்துவமனைக்கு கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி நபர் ஒருவர் மருத்துவ அவசரத்திற்காக சென்றபோது மருத்துவமனையில் யாரையும் காணவில்லை. இதனால் மருத்துவமனை வளாகத்தில் உள்ள பல்வேறு அறைகளுக்கு சென்று யாரேனும் இருக்கிறார்களா என பார்த்துள்ளார். அப்போது ஒரு அறையில் இரும்பு கட்டிலில் மதுவுடன் அசைவ விருந்து நடந்தற்கான சாப்பிட்ட தட்டுகள், மதுபாட்டில்கள் இருந்துள்ளது. 'ஒரு ஆத்திர அவசரத்திற்கு ஹாஸ்பிடலுக்கு வந்தால் இப்படி உட்கார்ந்து இரவு முழுக்க சரக்கு போட்டுள்ளனர்' என பேசிக்கொண்டே பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சி வைரலான நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Follow Us