2026 ஆங்கிலப் புத்தாண்டு உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது குற்றங்கள் நிகழாமல் இருக்க காவல்துறை முன்கூட்டியே நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் உள்ளூர் உளவுத்துறை அறிக்கையை அடிப்டையாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த அதிரடி சோதனையில் 1000 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

தலைநகர் டெல்லி புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தயாராகி வரும் நிலையில், கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி குற்றங்கள் நிகழாமல் இருக்க, டெல்லி முழுவதும் காவல்துறை சோதனை நடத்தியது. இதன்படி பல்வேறு சட்டங்களின் கீழ் கைது நடவடிக்கைகள் மற்றும் மீட்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. ஆயுதச் சட்டம், கலால் சட்டம், என்டிபிஎஸ் சட்டம் மற்றும் சூதாட்டச் சட்டம் ஆகியவற்றின் பல்வேறு பிரிவுகளின் கீழ் 285 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது குற்றத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் நபர்கள் என 504 பேர் கைது செய்யப்பட்டனர்.

Advertisment
5895
New Year celebration; More than 1000 people arrested; Police take action Photograph: (police)

தொடர் குற்றவாளிகளுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பட்டியலில் உள்ள 116 மோசமான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். மேலும் 10 சொத்துக் குற்றவாளிகள் மற்றும் 5 வாகனத் திருடர்களையும் கைது செய்ததுள்ளது காவல்துறை. சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் ஆயுதங்கங்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஆயுதங்கள், தோட்டாக்கள், கத்திகள் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து 21 நாட்டுத் துப்பாக்கிகள், 27 கத்திகள் உட்பட பல முக்கியப் பொருட்களும் கைப்பற்றப்பட்டன. இது மட்டுமல்லாமல் போதைப்பொருட்கள் மற்றும் மதுபான பொருட்கள் போன்றவற்றையும் காவல்துறை கைப்பற்றியுள்ளது. திருடப்பட்ட பொருட்கள் உட்பட 310 மொபைல் போன்கள், 231 இரு சக்கர வாகனங்கள் மற்றும் ஒரு நன்கு சக்கர வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

Advertisment

மொத்தமாக காவல்துறையின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் கீழ் நடத்தப்பட்ட இந்த சோதனையில் 1,306 பேர் கைது செய்யப்பட்டனர். பொதுவாகவே கூட்ட நெரிசல் மற்றும் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடக்கும் போது குற்றங்கள் நடைபெறும் என்பதால் அதைத்தடுக்கும் பொருட்டு 'ஆகாத் 3.0' அடிப்படையில், இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.