New Year 2026 was born on the island of Kiribati and People celebrated with enthusiasm!
2026 ஆங்கிலப் புத்தாண்டு இன்று (31-12-25) நள்ளிரவு 12 மணிக்கு உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில், உலகின் பல்வேறு நாடுகளிலும் 2026ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன.
அந்த வகையில் உலகின் முதல் நாடாகப் பசிபிக் பெருங்கடலில் உள்ள கிரிபாட்டி மற்றும் டோங்கா சாமோவா ஆகிய தீவுகளில் 2026ஆம் ஆண்டிற்கான புத்தாண்டு இன்று மதியம் 3:30 மணியளவில் பிறந்தது. 2025ஆம் ஆண்டிற்கு விடைகொடுத்து 2026ஆம் ஆண்டை வரவேற்கும் விதமாக வாண வேடிக்கைகளுடன் கோலாகலமாக்கப் புத்தாண்டைக் கொண்டாடி வருகின்றனர். உலகிலேயே முதலாவதாக கிரிபாட்டி தீவில் 2026 புத்தாண்டு பிறந்துள்ளது.
Follow Us