சிதம்பரம் அருகே  சரஸ்வதி அம்மாள் நகரில் புதிய மின்மாற்றியைப் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு துவக்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Advertisment

சி.கொத்தங்குடி ஊராட்சிக்கு உட்பட்ட சரஸ்வதி அம்மாள் நகர், அருண் நகர், எம்.கே கார்டன், கதிர்வேல் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில்  கடந்த சில மாதங்களாக குறைந்த மின்னழுத்தம் ஏற்பட்டது.  

Advertisment

இதனால் வீடுகளில் உள்ள மின் சாதன பொருட்கள் பழுது ஏற்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து மின் துறை அலுவலர்களிடம் சரஸ்வதி அம்மாள் நகருக்கு புதிய மின்மாற்றி அமைக்க வேண்டும் என நகரின் முக்கிய நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர்.

அதனடிப்படையில் சிதம்பரம் கோட்ட மின்துறை கண்காணிப்பு பொறியாளர் ஜெயந்தி, செயற்பொறியாளர் மோகன் காந்தி, அண்ணாமலை நகர் உதவி மின் பொறியாளர் சுபாஷினி ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு   புதிய மின்மாற்றி அமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டனர்.

Advertisment

கடந்த ஒரு வார காலமாக நடைபெற்ற இந்த பணி முடிவுற்ற நிலையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மின்மாற்றியை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி சரஸ்வதி அம்மாள் நகரில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு சரஸ்வதி அம்மாள் நகர் குடியிருப்போர் நல சங்க தலைவர் சுப்பு வெங்கடேசன் தலைமை தாங்கினார். அண்ணாமலை நகர் மின் துறை உதவி மின் பொறியாளர் சுபாஷினி கலந்து கொண்டு  மின் மாற்றியை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.

இதில் சரஸ்வதி அம்மாள் நகர் சங்க நிர்வாகிகள் சிவநேசன், குணஜோதி, வரதன்,காளிதாஸ் உள்ளிட்ட மின்துறை ஊழியர்கள் பிரகாஷ், முரளிதரன், குணசேகர், இளமாறன், கண்ணன், முத்துராமன் உள்ளிட்ட அனைத்து ஊழியர்கள்,  நகர் பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். மின் மாற்றி அமைத்துக் கொடுத்த மின்துறை ஊழியர்களுக்கு பொதுமக்கள் சால்வை அணிவித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.