சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் 22ஆவது அமைச்சரவைக் கூட்டம் இன்று (06.01.2026) நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “15 வயது முதல் 29 வயது வரை இருக்கக்கூடிய இளைய சமுதாயத்தைப் பொறுத்தவரை "நான்கு கருத்துகளை அவர்களிடம் கேட்கப்போகிறோம். அதில் குறுகிய காலத்தில் ( short term-ஆக) இதில் இரண்டை முதலில் செய்யுங்கள். இதை நாங்கள் உங்களிடம் எதிர்ப்பார்க்கிறோம். 

Advertisment

எங்களுடைய கனவாகப் பார்க்கிறோம் இன்னும் இரண்டு 2030க்குள் செய்துவிடுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது" என்று சொல்லும் அளவிற்கு அந்த இளைய சமுதாயத்திடமிருந்து இதை நாங்கள் பெற இருக்கிறோம். மாவட்ட ரீதியாக,15 நிமிடத்திற்கான வீடியோவில் 8 நிமிடத்தை பொறுத்தவரைக்கும்,  சாதனையாளர்களை உட்கார வைத்து வீடியோ காண்பிக்கப் போகிறோம். நம்முடைய மாநிலம் சார்ந்து நாம் சாதனைகள் செய்திருக்கிறோம் என்பதை மக்களிடம் கொண்டுசெல்லப் போகிறோம். மீதமுள்ள 7 நிமிடத்தில், அந்த மாவட்டம் சார்ந்து நாம் என்ன செய்திருக்கிறோம் என்பதை மக்களிடம் கொண்டுசெல்லப் போகிறோம்.

Advertisment

மக்களைப் பொறுத்தவரை, அவர்களுக்கு அவர்களின் வேலை தனிப்பட்ட வேலை கண்டிப்பாக இருந்துகொண்டுதான் இருக்கும். அதே நேரத்தில், ஒரு அரசாங்கம் என்ன செய்கிறது, உங்களை நம்பி நாங்கள் வாக்களித்தேனே இந்த வாக்களித்ததற்கு மதிப்பாக நமக்கு என்ன செய்திருக்கிறார்கள் என்பதை செய்ததை அவர்களிடம் சொல்லும் நிகழ்வாகத்தான் இது நடைபெற இருக்கிறது. இது வருகின்ற 9 ஆம் தேதி அன்று திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் தமிழ்நாடு முதலமைச்சர் “உங்கள் கனவை சொல்லுங்கள்” என்ற திட்டத்தை தொடங்கி வைக்க இருக்கிறார்.

mks-cabinet-meeting

அதைத் தொடர்ந்து அந்தந்த மாவட்டங்களில் இது தொடர்ந்து நடைபெறும். 9 ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் வரை 30 நாட்கள் கண்டிப்பாக ஒவ்வொரு குடும்பத்தையும் சென்று பார்க்கக்கூடிய அளவிற்கு எங்களுடைய அதிகாரிகள் தன்னார்வலர்களை தயார்படுத்தி வைத்திருக்கிறோம். வருகின்ற 11ஆம் தேதி முதல் நம்முடைய இளைய சமுதாயம் நான் சொன்னது போல் அந்த இணையதளத்தை நாங்கள் அவர்களுடைய பயன்பாட்டிற்கு கொண்டுவந்துவிடுவோம்” எனப் பேசினார். 

Advertisment