Advertisment

'தமாகாவில் ஐக்கியமாகும் புதிய கட்சி; விரைவில் இணைப்பு விழா'-ஜி.கே.வாசன் பேட்டி

a5822

'New party to unite in TMC; Merger ceremony soon' - G.K. Vasan interview Photograph: (GK VASAN)

ஈரோடு வில்லரசம்பட்டி நால்ரோட்டில் இன்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கொங்கு மண்டல மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே வாசன் தலைமை தாங்கினார்.

Advertisment

பின்னர் ஜி.கே.வாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசுகையில், ''டிசம்பர் 20-ம் தேதி காமராஜர் மக்கள் கட்சி த.மா.கா.வுடன் இணைகிறது‌. காமராஜர் மக்கள் கட்சியில் மரியாதைக்குரியவர்கள் உள்ளனர். அரசியல் சூழலுக்கு ஏற்றவாறு தமிழருவி மணியன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் சேர்ப்பது என்ற முடிவை எடுத்துள்ளார். இதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். 20-ம் தேதி காலை திண்டலில் உள்ள லட்சுமி துரைசாமி திருமண மண்டபத்தில் இணைப்பு விழா நடைபெற உள்ளது. 3000 நபர்களுக்கு மேல் கலந்துகொள்ளும் கூட்டம் நடைபெறவுள்ளது.

Advertisment

த.மா.கா மாவட்ட மாநில மற்றும் கொங்கு மண்டல நிர்வாகிகள் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இதனை குடும்ப விழாவாக தேர்தலில் த.மா.கா.வுக்கு பலத்தை ஏற்படுத்தும் நிகழ்வாக அமையும். திருப்பரங்குன்றத்தில் தி.மு.க சிறுபான்மை மக்களை திசை திருப்ப முயற்சிக்கிறது. நீதிமன்றத்தை தி.மு.க அரசியல் களமாக்க நினைக்கிறது. தி.மு.க கூட்டணி கட்சிகள் பேசி வைத்துக் கொண்டு செய்கிறது. இது இந்திய இறையாண்மைக்கு எதிரானது.

தமிழக அரசு ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் கழித்து பள்ளி மாணவ - மாணவிகளுக்கு லேப்டாப் வழங்குவது அரசியல். தேர்தலுக்கான அரசியல் ஆதாயத்திற்காக மகளிர் உரிமைத் தொகை விடுபட்டவர்களுக்கு வழங்கப்படுகிறது. இது வாக்கு வங்கி அரசியல். உள்ளாட்சி துறையில் வெளிப்படைத்தன்மை உள்ளதை விசாரிக்க வேண்டும்'' என்றார்.

ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் நிறைவேற்றியது குறித்து கேள்விக்கு, "சட்டத்திற்கு உட்பட்ட நாடு. தி.மு.க நீதிமன்றத்தை அரசியல் களமாக்க நினைக்கிறது. இது தவறான செய்கையை காட்டுகிறது. தி.மு.க கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்படுகிறது.மக்களுக்கான திட்டங்களுக்கு திமுக அரசு தடையாக உள்ளது‌. அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தம் குறித்து அரசு கவலைபடுவதில்லை. மகளிர் உரிமைத் தொகை திட்டம் எதிர்மறை வாக்குகளை தடுப்பதற்கான சூழ்ச்சி. வாக்கு வங்கியை வாங்கிக்கொண்டு 5 ஆண்டுகள் மக்களின் பணத்தை சுரண்டுவது வழக்கமாகிவிட்டது. பெண்கள் விழித்துக் கொள்ள வேண்டும்.

தோல்வி பயத்தால் மக்களை ஏமாற்றி நினைக்கும் தமிழக அரசு மீது வாக்காளர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அ.தி.மு.க தலைமையில் வலுவாக உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி வெல்வதற்காக காலம் கனிந்து கொண்டிருக்கிறது. கூட்டணி கட்சிகள் கூட்டுவதற்காக நேரம் காலம் உள்ளது. ஆளும்கட்சியினர் எங்கள் கூட்டணிக்கு வர வாய்ப்பு உள்ளது‌. நல்ல அறிவிப்புகள் வரும் எதிர்பார்க்கிறோம். கூட்டணியில் இருப்பதால் எங்களின் வெற்றி பிரகாசமாக உள்ளது‌. பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் கைது செய்ததை கண்டிக்கிறேன்''என்றார்.

பேட்டியின் போது பொதுச்செயலாளர் யுவராஜா, மாநிலத் துணைத் தலைவர் விடியல் சேகர், மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார், செயற்குழு உறுப்பினர் எஸ்.டி.சந்திரசேகர்  உள்பட பலர் உடன் இருந்தனர்.

gk vasan politics tmc
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe