பாஜகவின் தேசிய தலைவராக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜேபி நட்டா பதவி வகித்து வந்தார். இத்தகைய சூழலில் தான் இவரது பதவி காலம் முடிவடைந்தது. இந்நிலையில் அக்கட்சியின் தேசிய செயல் தலைவராக நித்தின் நபின் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் பிகாரில் முதலமைச்சர் நிதீஷ்குமார் அமைச்சரவையில் சாலை கட்டுமானத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். நிதின் நபின் பாஜகவின் தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டதை அடுத்து, பாட்னாவில் உள்ள கட்சி அலுவலகத்தில் பாஜக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். 

Advertisment

மேலும் அடுத்த ஆண்டு (2026) தமிழகம், கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில் இந்த நியமனம் தேசிய அளவில் அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்தாக பார்க்கப்படுகிறது. பாஜகவின்  தேசிய செயல் தலைவராக நித்தின் நபின் பீகார் மாநிலத்தின் பாங்கிபூர் தொகுதியில் 4 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் ஆவார். அவர் அக்கட்சியின் மூத்த நிர்வாகியாகவயும் சமூக நல ஆர்வலராகவும் இருந்து வருகிறார். இது தொடர்பாக பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நிதின் நபி தன்னை ஒரு கடின உழைப்பாளி,  கட்சியின் தொண்டர் என்று சிறப்பித்துக் கொண்டார். 

Advertisment

அவர் ஒரு இளம் மற்றும் கடின உழைப்பாளி. சிறந்த அனுபவமும் வளமும் கொண்டவர். மேலும் பீகாரில் சட்டமன்ற உறுப்பினராகவும் அமைச்சராகவும் பல முறை பணியாற்றியதில் பல்வேறு சாதனை படைத்தவர். மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற அவர் விடாமுயற்சியுடன் பாடுபட்டுள்ளார். அவர் தனது பணிவான இயல்புக்கும், நிதானமான வேலைப் பாணிக்கும் பெயர் பெற்றவர். அவரது ஆற்றலும் அர்ப்பணிப்பும் வரும் காலங்களில் நமது கட்சியை வலுப்படுத்தும் என்று நான் நம்புகிறேன். பாஜக தேசிய செயல் தலைவராக பொறுப்பேற்றதற்கு அவருக்கு வாழ்த்துக்கள்” எனத் தெரிவித்துள்ளார். 

modi-mic-tn

அதே போன்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பாஜகவின் வின் செயல் தலைவராக நித்தின் நபின் நியமிக்கப்பட்டுள்ளார். பீகாரைச் சேர்ந்த இளம் மற்றும் துடிப்பான தலைவரான  நித்தின் நபினுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். அவர் ஒரு கடின உழைப்பாளி மற்றும் சிறந்த மனிதர். பிரதமர் நரேந்திர மோடியின் எழுச்சியூட்டும் தலைமையின் கீழ், பாஜகவை வெற்றியின் புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதில் அவர் நிச்சயமாக வெற்றி பெறுவார். அவரது பதவிக்காலம் வெற்றிகரமாக அமைய எங்கள் (பா.ஜ.க. சார்பில்) வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment