தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisment

இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பொழிந்து வரும் நிலையில் சென்னை உட்பட 7 மாவட்டங்களுக்கு  மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisment

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாகை மாவட்டம் கோடியக்கரையில் 12 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. செம்பனார்கோவிலில் 9 சென்டிமீட்டர் மழையும், தங்கச்சிமடத்தில் 8 சென்டி மீட்டர் மழையும், தலைஞாயிறு, வேதாரண்யம், சீர்காழியில் தலா 7 சென்டி மீட்டர் மழையும், பாம்பன், புதுச்சேரி, மயிலாடுதுறை, தரங்கம்பாடியில் தலா 6 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

இந்தநிலையில் நவம்பர் 22 வாங்கக் கடலில் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேற்கு-வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற வாய்ப்பு இருப்பதால், கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய இரண்டு நாட்கள் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment