New low pressure area? - Alert for 20 districts Photograph: (weather)
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் நேற்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வரக்கூடிய நேரத்தில் சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும், காவிரிப்படுகை மாவட்டங்களிலும் மழை அதிகரிப்பதற்கான வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாவதற்கான வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் அடுத்த அறிவிப்பாக தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இரவு 7:00 மணி வரை வருமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வெளியான அறிவிப்பின்படி சென்னை, திருவள்ளூர், கோவை, கன்னியாகுமரி, திண்டுக்கல், கரூர், மதுரை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தென்காசி, சிவகங்கை, தஞ்சை, தேனி, நீலகிரி, திருச்சி, நெல்லை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.