new game that entertained the people on pongal festival in thanjavur
தமிழ்நாடு முழுவதும் தை திருநாள் கொண்டாட்டங்கள் தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. பல கிராமங்ளிலும், வித்தியாசமான போட்டிகளை நடத்தி சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளனர்.
அந்த வகையில், தஞ்சை மாவட்டம் பேராவூரணி தொகுதியில் உள்ள சித்துக்காடு கிராமத்தில் கடந்தாண்டு நடந்த பொங்கல் விழாவில் ஒருத்தரை ஒருத்தர் முறைத்துக்கொள்ளும் போட்டி அனைவரையும் சிரிக்க வைத்தது. அதே போல இந்த ஆண்டில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் பார்வையாளர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது சில போட்டிகள்.
விளையாட்டுப் போட்டிகளை காண அழகாய் அலங்கரித்து வந்த பெண்களை சில விளையாட்டுகளில் சேர்த்து அகோரிகளைப் போல் ஆக்கிவிட்டனர். தட்டுகளில் மைதா மாவை கொட்டி அதனை ஊதி ஊதி வெளியேற்றும் போட்டியில் கலந்து கொண்ட பெண்கள், வெற்றி பெற மைதா மாவை ஊத ஊத அவர்களின் முகம், முடி, உடைகள் எல்லாமே மைதா மாவு இருந்துள்ளது. போட்டி முடிந்து பார்த்த அவர்களே அரண்டு போனார்கள்.
அதே போல தலைமுடியில் துணி காயப்போடும் கிளிப்புகளை மாட்டிவிட்டு தலையை ஆட்டி ஆட்டியே கீழே விழ வைக்கும் போட்டியில் பெண்கள் தலைமுடியை விரித்து ஆடியது பேயாட்டம் ஆடியது போல தெரிந்தது. இந்த போட்டிகள் பார்வையாளர்களை கடைசிவரை மகிழ்வித்தது.
Follow Us