New DGP-Tamil Nadu government announcement Photograph: (police)
பொறுப்பு டிஜிபியாக அபய்குமார் சிங்கிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றதை அடுத்து வெங்கட்ராமனுக்கு (பொறுப்பு) டிஜிபி பதவி கடந்த ஆகஸ்ட் மாதம் வழங்கப்பட்டது. முறையாக டிஜிபியை தமிழக அரசு நியமனம் செய்யவேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. இந்நிலையில் பொறுப்பு டிஜிபியான வெங்கட்ராமன் 15 நாட்கள் அரசு விடுமுறையில் சென்ற நிலையில் தொடர்ந்து அவர் விடுப்பில் இருப்பதால் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராக இருக்கும் அபய்குமார் சிங் கூடுதலாக சட்டம் ஒழுங்கு டிஜிபி பொறுப்பைக் கவனிப்பார் என தற்போது தமிழக அரசு அறிவித்துள்ளது.
Follow Us