கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி ஏமப்பேர் புறவழி சாலையில் 5.47 ஏக்கர் நிலத்தில் 16 கோடியே 21 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக புறநகர் பேருந்து நிலையம் அமைக்கும் பணி கடந்த ஆண்டு ஜூன் 28ஆம் தேதி பணி தொடங்கப்பட்டு பணிகள் முடிவடைந்தது.
இந்த சூழ்நிலையில் கள்ளக்குறிச்சி அதிமுக நிர்வாகி குமரேசன் என்பவர் இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனால் பணிகள் முடிவடைந்த நிலையிலும் அதை திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் அதிமுக பிரமுகர் குமரேசன் தொடர்ந்து வழக்கை தள்ளுபடி செய்து, திறப்பு விழா நடத்தவும் தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
அதை தொடர்ந்து இன்று தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கள்ளக்குறிச்சி புதிய புறநகர் பேருந்து நிலையத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். அப்போது மாவட்ட கலெக்டர் பிரசாந்த் சட்டமன்ற உறுப்பினர்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் உள்ளிட்ட உடன் இருந்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)
/nakkheeran/media/media_files/2026/02/03/sivasankar-2026-02-03-19-05-25.jpg)