Advertisment

பறக்கும் விமானத்தில் அலட்சியம் : அஜித் பவாரின் மகன் வேதனை!

flight-ajit-pawar-son

மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வராக இருந்த அஜித் பவார், விமான விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம், மகாராஷ்டிரா மாநில அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதோடு, அவரின் குடும்பத்தினர் மீளாத் துயரத்திற்கு ஆளாகினர். இந்த சம்பவத்தில் சந்தேகம் இருப்பதாகத் தெரிவித்த அவரது குடும்பத்தினர், இது குறித்து தீவிர விசாரணை நடத்த வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், சமீபத்தில் அஜித் பவாரின் மகன் ஜெய பவார் விமானம் ஒன்றில் பயணம் செய்தார்.  

Advertisment

அப்போது, வி.எஸ்.ஆர். வென்ச்சர் விமானத்தின் உரிமையாளர் ரோஹித் சிங், விமான பயணத்தின் போது தலைமை விமானியின் இருக்கையில் அமர்ந்து உறங்கிக் கொண்டிருந்தார்.  இந்த வீடியோவை ஜெய பவார் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "எங்கள் தந்தையை இழந்துள்ளோம். இந்த வலி எங்கள் வாழ்நாள் முழுவதும் நீங்காமல் இருக்கும். இதனால் மீள முடியாத தூரத்திற்கு ஆளான நாங்கள், இன்னும் அதிலிருந்து வெளிவர இயலாத நிலையில் உள்ளோம். ஆனால், நீங்கள் இந்த விடியோவை பாருங்கள். இதில், வி.எஸ்.ஆர். வென்ச்சர் விமான நிறுவனத்தின் உரிமையாளர் ரோஹித் சிங், தலைமை விமானியின் இருக்கையில் அமர்ந்து தூங்கிக்கொண்டிருப்பதை வீடியோவில் காணலாம். 

Advertisment

விமானம் பறந்து கொண்டிருக்கும் நேரத்தில் இது போன்ற அலட்சியமான செயல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. இது மிகவும் கண்டிக்கத்தக்க ஒரு செயல். இந்த சம்பவத்தின் மீது சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ரோஹித் சிங் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும். அவர் கடுமையான சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். எனது தந்தைக்காகவும், ஒவ்வொரு பயணிகளின் பாதுகாப்பிற்காகவும் நான் இதைக் கேட்டுக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார். 

mh-ajith-pawar-flight
கோப்புப்படம்

இது குறித்து பலரும் தங்கள் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். பல்லாயிரக்கணக்கானோர், ஜெய பவாருக்கு ஆதரவு தெரிவித்து, இந்த செயலுக்கு கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாக, இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மகாராஷ்டிராவில் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொள்ளத் துணை முதல்வர் அஜித் பவார், சிறிய ரக "லியர்ஜெட்" விமானத்தில் பயணம் செய்தார். இந்த விமானம் காலை 08.45 மணியளவில் பாராமதி ஓடுதளத்தில் இறங்க முயன்றது. 

அந்த சமயத்தில் விமானம் ரேடாரில் இருந்து விலகிச் சென்றது. இதையடுத்து, விமானிகள் விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்க முயற்சி செய்தனர். இருப்பினும், ஓடுபாதைக்கு அருகே இருந்த புல் வெளியில் விமானம் விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் அஜித் பவார் உயிர் இழந்தார். இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், விதிகளை மீறி விமானத்தைத் தரையிறக்கியதே விபத்திற்குக் காரணம் எனப் புலனாய்வு விசாரணை பிரிவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

viral video flight ajit pawar Maharashtra
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe