Advertisment

நீட் நுழைவுத் தேர்வுக்கான தேதி அறிவிப்பு!

neet-stu-file

கோப்புப்படம்

இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் (NEET - National Entrance Eliglibilty Entrance Exam) எனப்படும் நுழைவுத் தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. அந்த வகையில் இத்தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட 13 மொழிகளில் நடைபெற உள்ளது. 180 கேள்விகளைக் கொண்டுள்ள இந்த தேர்வில் மொத்தம் 720 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் 2026 - 27ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு வரும் மே மாதம் 3ஆம் தேதி (03.05.2026) நடைபெறும் எனத் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 

Advertisment

அதன்படி இந்த தேர்வு  பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கி மாலை 05.00 மணி வரை நடைபெற உள்ளது. மேலும் இத்தேர்வுக்கான விண்ணப்ப பதிவு ஆன்லைன் வாயிலாக இன்று (08.02.2026) முதல் வரும் மார்ச் மாதம் 8ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு பொதுப்பிரிவினருக்கு ரூ. 1700, பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியோர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் (OBC) பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவர்களுக்கு ரூ. 1600, பட்டியலினத்தவர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ரூ. 1000 மற்றும் வெளிநாட்டில் உள்ளவர் அனைத்து பிரிவினர்களுக்கு ரூ. 9500 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இது தவிரச் செயலாக்கக் கட்டணம் மற்றும் ஜி.எஸ்.டி.கட்டணம் தனியாக வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு https://neet.nta.nic.in/ என்ற இணையதளத்தை அணுகலாம். அல்லது neetug2026@nta.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ, 011-40759000 மற்றும் 011-69227700 தொலைப்பேசி எண்களையோ தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

examination DATE ANNOUNCED neet exam neet
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe