admk Photograph: (eps)
தமிழகத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. விரைவில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் தேர்தல் நடைபெற வாய்ப்புள்ளதாக ஒருபுறம் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
Advertisment
இந்நிலையில் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் வைத்து எடப்பாடி பழனிசாமி தற்போது சந்தித்துள்ளார். மிக முக்கியமாக ஏன்டிஏ கூட்டணியில் இருக்கின்ற பாஜக உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்கு ஒதுக்கப்பட வேண்டிய தொகுதிகள் எண்ணிக்கை என்ன என்பது குறித்து இன்று நடைபெற்று வரும் இந்த பேச்சுவார்த்தையில் முடிவெடுக்க பட இருப்பதாக கூறப்படுகிறது. பாஜக 42 தொகுதிகள் வரை கேட்பதாகக் கூறப்படுகிறது. 42 தொகுதி என்பது அதிமுகவை தவிர்த்து பாஜக மற்றும் கூட்டணி உள்ள பாமக உள்ளிட்ட மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கும் பிரித்துத் தர திட்டமிடும் தொகுதிகள் எண்ணிக்கை என்று கூறப்படுகிறது.
Advertisment
அதிமுகவிடம் 42 தொகுதிகளை கேட்கும் பாஜக அதில் 35 தொகுதிகளை எடுத்துக்கொண்டு மற்ற தொகுதிகளை அமமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளுக்கு பிரித்துக் கொடுக்கும் என்று கூறப்படுகிறது. அடுத்தகட்டமாக இந்த சந்திப்புக்குப் பிறகு நாளை எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்ப உள்ள நிலையில் அதனைத் தொடர்ந்து அதிமுக தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் என்ன முடிவுகள் எடுக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து தமிழ்நாடு பாஜக தலைவர்களுக்கு மத்திய பாஜக தலைமையும் அறிவுறுத்தல் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow Us