Advertisment

யார் யாருக்கு எத்தனை தொகுதிகள்?; பேச்சுவார்த்தை நடத்திய என்.டி.ஏ கூட்டணி!

nda

NDA alliance held talks about seats will each get allocation

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, மதுரை மண்டேலா நகர் பகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் இன்று (01-26) தேர்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற இந்த பொதுக்கூட்டத்தில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பா.ம.க தலைவர் அன்புமணி, தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் பாரிவேந்தர் உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் பங்கேற்றனர்.

Advertisment

இந்த பொதுக்கூட்டம் நடைபெற்ற பின்னர், மதுரையில் அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சரும் தமிழக பா.ஜ.க.வின் தேர்தல் மேலிடப் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் முன்னிலையில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்களான டிடிவி தினகரன், அன்புமணி, நயினார் நாகேந்திரன், ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

Advertisment

இதில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 170க்கும் அதிகமான தொகுதிகளில் அதிமுக போட்டியிட திட்டமிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதே போல் பா.ஜ.கவுக்கு 25, பா.ம.கவுக்கு 25 தொகுதிகள் ப்ளஸ் 1 ராஜ்யசபா சீட் ஒதுக்க திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. திமுக கூட்டணிக்கு தேமுதிக சென்றுவிட்டதால் அமமுக அதிக தொகுதிகளை கேட்டுப் பெற வாய்ப்பிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

edappadi k palaniswami seat Piyush Goyal NDA
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe