தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ளத் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஆயத்தமாகி வருகின்றனர். குறிப்பாக விருப்ப மனு, தொகுதி பங்கீடு, கூட்டணி கணக்குகள், தேர்தல் பரப்புரை என அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் தான் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில், பாமக தலைவர் அன்புமணி நேற்று (07.01.2026) காலை சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பில் அதிமுக - பாமக இடையிலான தேர்தல் கூட்டணி உறுதி செய்யப்பட்டது. இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றடைந்தார். அதனைத் தொடர்ந்து டெல்லியில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் நேற்று இரவு எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதிமுக, பாஜக கூட்டணியில் பாமக இணைந்த நிலையில் இந்த ஆலோசனையானது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. மேலும் இந்த கூட்டணியில் கூடுதலாக எந்தெந்த கட்சிகள் இடம்பெற உள்ளது, தொகுதிகள் இறுதி செய்யப்பட வேண்டியது தொடர்பான பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் எடப்பாடி பழனிசாமியை, பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மாநில துணைத் தலைவர்கள் சந்தித்து நாளை (09.01.2025) காலை 9 மணி அளவில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த சந்திப்பின் போது தொகுதிப் பங்கீடு, கூட்டணியில் மேலும் சில கட்சிகளைக் கொண்டு வருவது, பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்திற்கு வருவதற்கு முன்னதாக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் தலைவர்களையும் ஒரே மேடையில் அமர்த்தி பிரச்சாரம் செய்வது தொடர்பாகவும் முக்கிய ஆலோசனை நடைபெறும் எனக் கூறப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/08/nainar-eps-mic-2026-01-08-17-35-50.jpg)